tamilnadu
மழை அடிச்சு வெளுக்க போகுது… நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதீத கன மழைக்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியின் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யும். அதைத்தொடர்ந்து திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை கன்னியாகுமரியில் இன்று கனமழை-காண மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெரிய வாய்ப்பு இருப்பதால் அங்கு ஆரஞ்சு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நாளை கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.