Latest News
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்… இரங்கல்…!
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை தலைவராக செயல்பட்டு வருபவர் வெள்ளையன். இவருக்கு 76 வயதாகின்றது. நுரையீரல் நோய் தொற்று உள்ளிட்ட சில பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி என்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர் வீட்டில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்படும் நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.