tamilnadu
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… கைதான மலர்க்கொடி… அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரை மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி படுகொலை செய்திருந்தார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்துவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்திருக்கின்றார். இந்நிலையில் இந்த வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச்செயலாளர் மலர்க்கொடி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் .
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தென் சென்னை வடக்கு கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு களங்கமும் அவபேரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி சேகர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றும் அதில் தெரிவித்து இருக்கின்றார்.