Connect with us

மகாவிஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலகர் திடீர் பணியிட மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

Latest News

மகாவிஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலகர் திடீர் பணியிட மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பரம்பொருள் அறக்கட்டளை என்ற நிறுவனத்தின் நிறுவனர் மகாவிஷ்ணு. கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற இருந்தார். இதில் அவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசும் வகையிலும் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் அவர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை போலீஸ் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இயக்குனர் கண்ணப்பன் வழங்கிய நிலையில் இது தொடர்பாக முதல்வர் தனிச் செயலாளர் சண்முகம், பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் இனிவரும் காலங்களில் பள்ளிகளில் இது போன்று நடக்காமல் இருப்பதற்கு புது வழிமுறை வகுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

More in Latest News

To Top