திருமணம் ஆகி நான்கே நாளில் தற்கொலை – மணப்பெண்ணின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம் !

திருமணம் ஆகி நான்கே நாளில் தற்கொலை – மணப்பெண்ணின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம் !

மதுரை அருகே அரசரடி எனும் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வி என்ற பெண் திருமணமாகி நான்கே நாளில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசரடி எனும் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் தவச்செல்வி என்ற பெண்ணோடு கடந்த வாரம்  திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ணான தவச்செல்வி, கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னரும் வேலைக்கு செல்லும் திட்டத்தில் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவச்செல்வி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

போலிஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவச்செல்வி தன் கணவரிடம் வேலை செய்யும் இடத்தில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சொல்லி புலம்பியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.