Latest News
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தரமா இருக்கு… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்…!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் தரமாக இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.
தமிழகத்தில் மிகப் பிரபலமான கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். தினமும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக 2019 ஆம் ஆண்டு பிரசாதம் இங்கு லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இங்கு லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாமல் வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பிரசாதமாக தயாரிக்கப்படுகின்றது. திருப்பதி கோவிலில் லட்டு விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது. இந்து சமய அறநிலை துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு செய்தார், அப்போது பிரசாதம் தயாரிக்கும் உணவு கூடத்தை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் அழகர்கோவில் நெய் தோசை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அதன் பிறகு மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட பிரசாதங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். லட்டு உட்பட அனைத்து பொருட்களும் சுத்தமாகவும், தரமாகவும் இருக்கின்றது’ என்று தெரிவித்திருக்கின்றார்,