Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News tamilnadu

இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

இந்தியா முழுவதும் கூல் லிப்பை ஏன் தடை செய்யக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகே கூல் லிப் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்ததால் காவல்துறையினர் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் கைதானவர்கள் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்லூரி மாணவர்கள் கூல் லிப் என்ற போதை பொருளுக்கு அதிகம் அடிமையாவது தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி தமிழகத்தில் கூல் லிப் போதைப் பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்பட்டு தான் வருகின்றது.

இத்தகைய போதை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுவது தான் இன்னும் வேதனையை தருகின்றது. தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகிவரும் வன்முறை மற்றும் அடிதடிகள் இத்தகைய போதை பொருள் பயன்பாட்டு தான் முக்கிய காரணம். எனவே இத்தகைய போதை பொருளை பாதுகாப்பற்ற உணவு பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் இதனை தடை செய்யக்கூடாது? என்று மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றார்.