tamilnadu
சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பு இல்ல… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி..!
சென்னையில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.
ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கோவளம் வடிநிலப் பகுதிகளில் ரூபாய் 666.32 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை நீர் எந்த இடத்திலும் தேங்காமல் வடிகால் மூலமாக வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டது.
இதை தொடர்ந்து பெருங்குடி சர்ச் சாலையில் இந்த பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்வி ரவிச்சந்திரன் மற்றும் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 2000 கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்ற தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.
தற்போது சென்னையில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் முதல்வர் மு க ஸ்டாலின் என்று பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நீலாங்கரை மதியழகன், சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவர் பாலவாக்கம் விசுவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.