tamilnadu
முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி பயணம்… பிரதமரை சந்திக்க திட்டமா..?
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 26 ஆம் தேதி பிரதமரை சந்திக்க டெல்லி தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கின்றார். வரும் 26 ஆம் தேதி சாணக்கியபுரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கின்றார்.
ஏற்கனவே இருக்கும் வைகை என்ற தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்திருக்கின்றது. இதன் காரணமாக டெல்லி செல்லும் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.