Connect with us

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… மக்களே கவனமா இருங்க… வானிலை எச்சரிக்கை…!

Latest News

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… மக்களே கவனமா இருங்க… வானிலை எச்சரிக்கை…!

மத்திய வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் அதிகமாக பெய்தது.. பருவமழை முடிவும் தருவாயில் இருக்கின்றது அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை திரும்ப வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி இருக்கின்றன.

இந்நிலையில் ஆந்திர கடற்கரையில் இருந்து தென்கடலோரம் மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதிகளில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும், மற்றொரு தென்கடலோரம் மியான்மர் பகுதிகளிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டு இருக்கின்றது.

மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என கூறப்பட்டிருந்தது. அது தாமதமாகும் சூழல் நிலவுகின்றது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

இதனால் தமிழகத்தில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல்டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

More in Latest News

To Top