tamilnadu
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!
சென்னை மாநகரில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் தாழ்வான மாநகர பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாழ்வான சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருந்தன. ஆனால் 2018 பிறகு தாழ்வான சொகுசு பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக முதலில் வாதிடப்பட்டது. தாழ்வான சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு மட்டுமில்லாமல் தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் உள்ளே புகுந்துவிடும் என்பதால் குறுகலான சாலைகளில் இயங்குவது என்பது சிரமமாக இருந்தது. அதன் காரணமாக தான் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று தமிழக அரசு சார்பாக வாதிடப்பட்டது.
எனினும் தாழ்வான சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. குறைந்தபட்சம் 350 பேருந்துகளையாவது இயக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் தாழ்வான மாநகர பேருந்து சேவை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சக்கர ஏற வசதியான தாழ்தள பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்தில் ஏறும் உயரம் குறைவாக இருக்கும் வகையில் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாழ்தள உயரத்தை இடது புறத்திலிருந்து சாய்த்து மிக எளிதாக ஏறி இறங்குவதற்கு மாநகராட்சி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.