அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சேலம் மாவட்டத்தின் முக்கிய அடையாளத்தில் ஒன்று கோட்டை மாரியம்மன் கோயில். சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்த கோவில் அமைந்திருக்கின்றது. சேலத்தில் இருக்கும் எட்டு மாரியம்மன் கோவில்களின் தலைமையாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அதிலும் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா சமயத்தில் சேலம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். வெளியூர்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து கோட்டை மாரியம்மன் கோவிலை தரிசனம் செய்து செய்வார்கள். இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவை சேலம் மாவட்டத்தில் இயங்காது.
நாளை கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கின்றார். அதில் சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை அரசு பாதுகாப்பான அவசர அலுவலகங்கள் கண்காணிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்திருக்கின்றார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.