tamilnadu
சிக்கனோடு சேர்த்து வண்டையும் பொறிச்சிட்டாங்க… சட்டக் கல்லூரி மாணவர்கள் கொடுத்த புகார்…!
மதுரை அருகே கேகே நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் உணவை பார்சல் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அதனை எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது சிக்கன் 65 க்குள் கருகி நிலையில் வண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக பார்சலை கொண்டு போய் உணவகத்திற்கு காட்டி இருக்கிறார்கள். சிக்கனில் வண்டி இருப்பதை கூறி உணவு ஊழியர்களிடம் கேட்டபோது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சட்ட கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் கொடுத்துள்ளார்கள்.
அதில் உணவக ஊழியர்கள் அளித்த விளக்கம் தொடர்பாகவும் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டி இருப்பது உறுதியானதால் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.