கொடைக்கானல் அருகே திடீரென்று நிலம் இரண்டாக பிளந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் கூனிப்பட்டி. இந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி நீரத்திற்கு நீளத்தில் திடீரென பிளவு ஏற்பட்டுள்ளது. மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையிலிருந்து குழாய் மூலம் நீர் வராததால் கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்திருக்கிறார்கள்.
அப்போது நிலம் பிளவடைந்து இருப்பது தெரியவந்தது. இப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளோ சுரங்க பணிகளோ நடைபெறவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் திடீரென்று நிலத்தில் பிளவு எப்படி உருவானது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதியை கேரளாவை ஒட்டி உள்ள பகுதி என்பதால் வயநாட்டில் ஏற்பட்டதை போன்று நிலச்சரிவு இங்கு ஏற்படுமோ என அச்சமடைந்திருக்கிறார்கள். இப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை என வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

