Latest News
கிருஷ்ணகிரி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனே இதை செய்யுங்க… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பள்ளி மாணவிகளுக்கு இரண்டு வாரங்களில் கருணைத்தொகை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள காந்தி குப்பம் கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை செய்ததில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டினம் காந்திநகர் காலனியை சேர்ந்த 35 வயதான சிவராம் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
மேலும் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து வந்த நிலையில் சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரண்டு வாரங்களில் கருணைத்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் இரண்டு பேருக்கு தலா 5 இலட்சமும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சமும் வழங்க வேண்டும். கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளிடமே வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை இன்னும் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.