tamilnadu
கருணாநிதி நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலூரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: ” முன்னாள் முதல்வர் கருணாநிதி 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் கலைஞர் கருணாநிதி படைத்து இருக்கின்றார்.
தனி ஒரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா? என எண்ணும் வண்ணம் கலைஞரின் சாதனை இருக்கின்றது. கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூல்ரிமை தொகை எதுவும் இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படும். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.