மேற்கு வங்காளம் மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் இது தொடர்பாக போராட்டம் அறிவித்து போராடி வருகிறார்கள்.
இன்று காலை தொடங்கி நாளை காலை வரை பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவசர சிகிச்சையை தவிர பிற நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப் போவதில்லை என்று கூறி தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதிலளித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம். மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி இருக்கின்றார். குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.