tamilnadu
சுதந்திர தினம்… 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் கையில் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றது.
அதிகாரிகளின் விவரங்கள்:
* கி.புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்
* து. வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
* ச.செளமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.
* ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.
* நா. பார்வதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
* பெ.ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.
* செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.
* இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.
* ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலுார் மாவட்டம்.
* நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்.
விருதுகள் பெரும் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.