tamilnadu
சுதந்திர தின அணிவகுப்பு… இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்… வெளியான அறிவிப்பு…!
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகின்றது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதையொட்டி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 9 மற்றும் 13 ஆகிய மூன்று தேதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சங்கம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய பகுதிகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்களை தவிர மற்ற அனைவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து பாகங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம்.
சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8:30 ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்த வேண்டும். அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கி கொண்டு வாகனங்களை தீவு திடலில் உள்ளே நிறுத்த வேண்டும். அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்” என்று போக்குவரத்து துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.