Latest News
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டிருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விடுதலை போராட்ட வீரர்களுக்கு 21 ஆயிரம் ஆக மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
மேலும் கட்டபொம்மன், வ உ சி சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 10,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.