Latest News
அரங்கேறிய சோகம்?…அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…நடந்தது என்ன?…
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நிகழ்வு பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல கொடியேற்றத்துடன் துவங்கியது ஆனித்திருவிழா. தினசரி சிறப்பு பூஜைகள், சடங்குகள் என கலைகட்டி வருகிறது திருவிழா.
நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மன் கோவிலில் திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தி முழக்கத்துடன் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தேர்கள் நகரத்துவங்கியது.
சிறிது தூரம் வந்ததுமே நெல்லையப்பர் தேரின் வடங்கள் அறுந்து விட்டன. இதனால் தேரோட்டத்தில் தடை ஏற்பட்டது. நான்கு வடங்கள் தேரில் இருந்த நிலையில் மூன்று வடங்கள் அருந்து விட்டது. கோவில் நிர்வாகத்தினர் நிலைமையை சமாளிக்கும் விதாமாக அறுந்து விழுந்த மூன்று வடங்களை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து நான்கு முறை தேரின் வடங்கள் அறுந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. தற்காலிகமாக பழுது நீக்கப்பட்ட நிலையில் தேரோட்டம் தொடர்ந்தது. திருச்செந்தூர் கோவிலில் இருந்து தேருக்கான வடம் கேட்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் பெயர் பெற்ற நெல்லையப்பர் தேரோட்டத்தில் இது போன்ற நிகழ்வு நடந்தது பக்தரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.ஐநூற்றி பதினெட்டு ஆண்டு கால தேரோட்ட வரலாற்றில் இப்படி ஒரு தடையும், சோக சம்பவம் நடந்ததே இல்லை என்பதால் இது கோவில் நிர்வாகத்தின் அலட்சியபோக்கையே காட்டியுள்ளதாக தேரோட்ட நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர்.