tamilnadu
ஒரு மாநிலத்தின் முதல் மந்திரிய இப்படி தான் நடத்துவீங்களா..? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!
ஒரு முதல் மந்திரியை இப்படி தான் நடத்துவீர்களா? என்று முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணி முதல் மந்திரிகள் யாரும் பங்கேற்கவில்லை. மேற்குவங்க முதல் மந்திரியான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். ஆனால் இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அமிதா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் கூடிய அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகின்றது. அதனால் வெளிநடப்பு செய்தேன். பாரதிய ஜனதா மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி முதல் மந்திரிகளை 10 முதல் 20 நிமிடம் வரை பேசுவதற்கு அனுமதித்தார்கள். சந்திரபாபு நாயுடு 20 நிமிடம் வரை பேசினார். அசாம், கோவா. சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் 10 முதல் 12 நிமிடம் வரை பேசினார்கள்.
அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே எனக்கு பேச வாய்ப்பளித்தார்கள் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசிய போது உடனே என் மைக்கை ஆப் செய்தனர்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது “இதுதான் கூட்டுறவு ஆட்சியா? ஒரு முதல் மந்திரியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாரதிய ஜனதா அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தில் எதிர்க்கட்சிகள் உரையாடலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டு இருக்கின்றார்.