Latest News
இப்படி ஆகும்ன்னு நினைக்கவே இல்லையே…அதிர வைத்த தங்கத்தின் விலை?…
தினசரி விற்பனை விலையில் மாற்றங்களை சந்தித்து வருவது ஆபரணத் தங்கத்தை பொறுத்த வரை சகஜம் தான். ஒரு சில நாட்கள் இறங்கு முகத்திலேயே இருக்கிறது என்ற மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்காது. எப்படி விலை குறைகிறதோ அதை விட வேகமாக மளமளவென உயர்ந்து அவ்வப்போது அதிர்ச்சியை கொடுத்து விடும்.
கடந்த மாத இறுதியில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை. இதே போல தான் வெள்ளியின் விலையும். சின்ன சின்ன வித்தியாசங்களை சந்தித்து வந்தது.
எப்படி கடந்த மாத இறுதியில் குறைந்து ஆனந்தப்படுத்தியதோ விலை அதே போல இந்த மாத துவக்கத்திலிருந்து அதிரடி மாற்றங்களை கொடுத்து வருகிறது தங்கம். ஆரம்பத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாத விலை இப்போது அதிரடியாக உயரத்துவங்கியுள்ளது.
நேற்றை விட இன்றைய விலையில் அதிரடி மாற்றம் இருக்கிறது. சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஆராயிரத்து எழுனூற்றி அறுபது ரூபாயாக (ரூ.6,760/-). ஒரு சவரன் ஐம்பத்தி நாலாயிரத்து என்பது ரூபாயாகவும் இருக்கிறது. (ரூ.54,080/-). நேற்றைய விலையை விட இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை.
அதே போல வெள்ளி ஒரு கிராம் தொன்னூற்றி ஏழு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு (ரூ.97.50/-) விற்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு கிலோ வெள்ளி தொன்னூற்றி ஏழாயிரத்து ஆராயிரம் ரூபாய்க்கு (ரூ.97,500/-) விற்கப்படுகிறது. ஓரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.