Connect with us

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை… முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கல்…!

tamilnadu

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை… முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கல்…!

உயர்கல்வி படிக்க இருக்கும் 120 மாணவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் அரசு சார்பாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி இருந்தார். 120 மாணவர்களுக்கு ஊக்க தொகையை அவர் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 5.12 கோடியில் 10,000 சதுர அடியில் மாநில அவசரகால செயல்பாட்டு மைதானத்தையும் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

More in tamilnadu

To Top