Latest News
BUN-ன்னா கிரீம் இருக்கணும்.. Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும்… சர்ச்சையை வைத்து விழிப்புணர்வு…!
BUN-ன்னா கிரீம் இருக்கணும், Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற சர்ச்சை சம்பவத்தை வைத்து வாகன ஓட்டிகளுக்கு பன் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல அமைப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாசன் இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கின்றது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் உள்ளது.
இதற்கு முரண்பாடு களையப்பட வேண்டும். அதேபோல பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல ஆனா அதுக்குள்ள வைக்கிற கிரீமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கு என்று வாடிக்கையாளர் சொல்கிறார்கள். கிரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் சொல்றாங்க.. கடையை நடத்த முடியல மேடம்.. ஒரே மாதிரி வையுங்கள்.. ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்ப்யூட்டரை திணறுது மேடம்.. என்று தனது ஆதங்கத்தை கூறியிருந்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை வைத்து தஞ்சாவூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் பண்ணுனா கிரீம் இருக்கணும் பைக்-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற வாசகம் அடங்கிய பன் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் வழங்கப்பட்டது.