Latest News
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை… 19 விமான சேவைகள் பெரும்பளவு பாதிப்பு..!
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் பெரிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்று இருக்கிறது. இதனால் தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை, பாரிமுனை, மதுரவாயில், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், அனகாபுத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் சூறைக்காற்று இடி மின்னல் பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் என 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. வானிலை சீரானதும் வானில் வட்டம் மடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு விமானங்களும் தரையிறங்கின.