tamilnadu
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 16ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.