Latest News
குளுக்குளுவென மாறிய சென்னை… பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை…!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளுகுளு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. நேற்று வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதன் எதிரொலியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை அண்ணாசாலை, கோயம்பேடு, மதுரவாயில், வளசரவாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வானகரம், முகப்பேர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்திர்த்தது. மந்தவெளி, அடையாறு, பட்டினம்பாகம், திருவெற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து இருக்கின்றது.
சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து வண்டலூர், சேலையூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.