tamilnadu
மீண்டும் பலத்த காற்றுடன் மழை… குஷியில் சென்னைவாசிகள்…!
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதால் நகர் வாசிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து இருக்கின்றது. பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதால் சென்னையில் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுகின்றது. அதிலும் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சீத்தலாப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.