Latest News
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு விவரம் இதோ…!
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது:
* J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை ‘ஹேப்பி ஸ்ட்ரீட் ‘ நிகழ்ச்சியினை நடத்த ‘டைம்ஸ் ஆப் இந்தியா ‘என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி ‘ஹேப்பி ஸ்ட்ரீட் ‘ நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
*ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” திருப்பம் செய்து ரெயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
* விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரெயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் U- திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.