மதுகடைகளை யார் திறந்தார்களோ அவர்கள் தான் மூட வேண்டும் என்று எச். ராஜா ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.
தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர்களிடம் கூறியதாவது ‘தமிழகத்தில் மதுகடைகளை திறந்தவர்கள் தான் தவிர மத்திய அரசு எப்போதும் மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி.
மாநாடு மக்களை ஏமாற்றும் மோசடி. அறநிலையத்துறை குறித்து கட்டாயம் வெள்ளை அறிக்கை வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 15% வாக்குகளை இழந்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கின்றதா என்று கட்சி தொண்டர்கள் நினைத்திருக்கலாம்.
அதனால் தான் கடந்த தேர்தலில் 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. சில இடங்களில் டெபாசிட் இழந்துள்ளார்கள். மேலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்’ என்று பேசியிருக்கின்றார்.