Connect with us

குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவு… டிசம்பர் மாதம் வெளியீடு… tnpsc அறிவிப்பு…!

Latest News

குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவு… டிசம்பர் மாதம் வெளியீடு… tnpsc அறிவிப்பு…!

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது நடந்து முடிந்த நிலையில் இதற்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கின்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழக அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் போட்டி தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் முடித்த பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது.

இதில் 507 காலிபணியிடங்கள் இருந்தன. அதேபோல் உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் ஆகிய குரூப் 2ஏ பணியிடங்களில் 1820 பணியிடங்கள் காலியாக இருந்தது. இதற்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது.

தேர்வுக்கான விடை குறிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் குருப் ட2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கின்றது.

More in Latest News

To Top