Connect with us

தமிழகத்தில் பி.எச்.டி படிப்பில் தரம் இல்லை… கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு…!

Latest News

தமிழகத்தில் பி.எச்.டி படிப்பில் தரம் இல்லை… கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு…!

தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பின் தரம் திருப்தியாக இல்லை, கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருக்கின்றார்.

தேசிய நிறுவனர் தரவரிசை கட்டமைப்பு 2024 தரவரிசையில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கமும் சென்னை கிண்டியில் இருக்கும் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

தமிழகத்தில் என்.ஐ.ஆர்.எப். முன்னிலையில் இருந்த 11 உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளை கவர்னர் ஆர் என் ரவி கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியிருந்ததாவது “நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தை சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது. இந்த நிகழ்ச்சியானது தற்போது மூன்றாவது முறையாக நடைபெறுகின்றது.

இதன் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்ற கல்வி நிறுவனங்களுடன் கலந்து பணியாற்றாமல் தனியாக செயல்படுவதை மாற்றி மற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாகும். தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். பிஎச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

ஆனால் அவர்களின் கல்வி தரம் திருப்தியாக இல்லை. ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே பிஎச்டி படிப்புக்கான கல்வித்தரத்தை சிறப்பாக வழங்கி வருகின்றது. அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களின் பிஎச்டி படிப்பின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். முதுநிலை படிக்கும்போதே இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் நீட் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உயர்ந்திருக்கின்றது. மேலும் அறிவுசார் சொத்துகளையும் உருவாக்கி இருக்கின்றது” என்று அவர் பேசியிருந்தார்.

More in Latest News

To Top