tamilnadu
78 வது சுதந்திர தினம்… தேசிய கொடியேற்றிய கவர்னர் ஆர் என் ரவி…!
கவர்னர் மாளிகையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கிண்டியில் இருக்கும் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கவர்னர் ஆர்என் ரவி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களைப் போலவே உடையணிந்த பல்வேறு கல்வி நிலையங்களை சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளுடன் கவர்னர் ஆர் என் ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.