tamilnadu
துவரை, பாமாயில் கொள்முதல்… தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு… ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்குமா..?
ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கின்றது.
தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெயை குறைந்த விலையில் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள்.
ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் வெளிச்சந்தைக்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்து மிக மிக குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்கி வருகின்றது. அதன்படி துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைகளில் சரியான அளவு பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கவில்லை என்று மக்கள் பலரும் மக்கள் பலரும் புகார் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு விரைவில் பொருட்களை வழங்குவோம் என்று அறிவித்துள்ளது.
அடுத்து இரண்டு மாதத்திற்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழக நுகர்வோர் வாணிப கழகம் டெண்டர் கோரி இருக்கின்றது. இந்த டெண்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க 27 ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தடை இன்றி விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவாக இந்த பொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.