tamilnadu
நிலச்சரிவு எதிரொலி… மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!
நிலச்சரிவு காரணமாக மலை பிரதேச மாவட்டங்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் இதுவரைக்கும் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 4-வது நாட்களாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியாக தமிழகத்தில் மலைப்பகுதியில் இருக்கும் மாவட்டங்களை கண்காணிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மலை நாட்களில் கண்காணிப்பை தீவிர படுத்தவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும், பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நேரத்தில் வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்திய உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசு துறை அதிகாரிகள் தகவல் கூறியிருக்கிறார்கள்.