Latest News
அரசு முட்டைகள் விற்பனை… ஓட்டலுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!
அரசு முட்டையை விற்பனை செய்து வந்த ஹோட்டல் நிறுவனத்தை சீல் வைத்து மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு சத்துணவு முட்டையை கல்லை சந்தையில் அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள். அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு முட்டையை விற்பனை செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்திருந்தார். அரசு முட்டைகளை பயன்படுத்தி வந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்பனை செய்தவர்கள் யார்? இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் அவர்கள் விற்பனை செய்தார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கு விற்பனை செய்திருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு முட்டைகளை அவர்களுக்கு விற்பனை செய்தது யார் என்று விசாரணை நடத்தப்படும் உள்ளது.