tamilnadu
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. பட்டதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு..!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படுகின்றது.
தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கு மாணவர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகின்றது.
இது தொடர்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 25 ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள செயற்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும். விண்ணப்ப கட்டணம் ஒரு மாணவருக்கு 58 ரூபாய், பதிவு கட்டணம் 2 ரூபாய், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாக செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் என்ற பெயரில் வங்கி வர ஓலை மூலமாக அல்லது நேரடியாக செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.