Latest News
அச்சச்சோ இப்படி விலை ஏறினா என்ன பண்றது?…ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!…
கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலையேற்ற செய்தி தங்க நகை பிரியர்களை வேதனையடைய செய்துள்ளது. இதே நிலை தொடர்ந்து விடுமோ? என்ற பயமும் அவர்களுக்குள்ளே உருவாகி உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவைகளாலேயே தங்கத்தின் விலை நிர்ணயமாகிறது. இதனால் தான் அடிக்கடி மாற்றங்களை சந்திக்கும் விலை நிலவரம்.
ஒரு சில நாட்கள் இறங்கு முகத்தில் இருந்து வந்தாலும், திடீரென ஜெட் வேகம் எடுத்து உயரத்துவங்கிவிடும் இதன் விலை. இது சாமானியர்களுக்கு வருத்தம் அளித்தாலும்,வியாபாரிகளுக்கு ஒரு பக்கம் இது ஆனந்தத்தை அளிக்கும்.
இந்த வார துவக்கத்திலிருந்தே குறைந்து வந்த ஆபரண தங்கத்தின் விலையில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய விலையை விட சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
இருபத்தி இரண்டு கேரட் (22 கேரட்) தங்கம் ஒரு கிராமின் விலை நேற்றை விட நாற்பத்தி ஓரு ரூபாய் (ரூ.41/) உயர்ந்து ஆராயிரத்து அறனூற்றி அறுபத்தி ஆறு ரூபாய்க்கு (ரூ.6,666) விற்கப்படுகிறது.
ஐம்பத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.53,000/-) நேற்று விற்கப்பட்ட எட்டு கிராம் தங்கம் இன்று ஐம்பத்தி மூவாயிரத்தி முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாயாக (ரூ.53,328) இருக்கிறது. நேற்றை விட முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய் (ரூ.328/-) உயர்ந்துள்ளது.
குறைந்தே காணப்பட்டதால் வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் தங்க விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஏறுமுகத்திற்கு சென்று விட்டது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை.