Business
மறுபடியும் மொதல்ல இருந்தா?…சட்டென உயர்ந்த தங்கத்தின் விலை…
தங்கம் பலருக்கும் இது எட்டாக்கனியாக இருக்கலாம் இன்று வரை. அனாலும் அதன் மீதுள்ள மோகம் என்றுமே குறைவதாக தெரியவேயில்லை. நாள்தோறும் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும் தங்கத்தை வைத்து நடைபெறும் வியாபாரத்தின் காரணமும் கூடவே. இப்படி நிலையான மவுசு குறையாத ஒரு ஆடம்பரப் பொருளாகவும் இருந்து வருகிறது இந்தியாவை பொறுத்த வரை தங்கம்.
நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்ற்ம் இருந்தது. திடீரென தடாலடி காட்டி விலையில் குறைவு இருந்து வந்தது. கடந்த வாரத்தின் துவக்கத்திலிருந்தே மாற்றங்கள் காட்டி வந்தது இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை. நேற்றைய தினத்தில் விலையில் குறைவை கண்டது தங்கமும், வெள்ளியும்.
இன்று யாரும் எதிர்பார்த்திராத விதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமிற்கு நாற்பத்தி ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் இன்று சென்னையில் விற்கப்பட்டு வரும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆராயிரத்து என்னூற்றி முப்பது ரூபாயாக உள்ளது (ரூ. 6830/-). ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஐம்பத்தி நாலயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.54640/-) இருக்கிறது.
ஆனால் வெள்ளியின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது ஒரு கிராமிற்கு இருபது காசுகள் (20 காசுகள்) குறைந்து தொன்னூற்றி ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகளாக (ரூ. 99.50/-) உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஒன்பது ஆயிரத்து ஐனூறு ரூபாய்க்கு (ரூ.99,500/-) விற்கப்பட்டு வருகிறது.