Connect with us

அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி… அரங்கேறிய துயரச்சம்பவம்…!

Latest News

அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி… அரங்கேறிய துயரச்சம்பவம்…!

சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே நம் விரல்வழியில் கிடைத்து விடுவது போல் ஷாப்பிங் மிக எளிமையாக இருக்கின்றது. நமக்கு தேவையான எந்த ஒரு பொருளும் எந்த மூலையில் இருந்தாலும் அதனை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடிகின்றது. வீட்டுக்கு தேவையான பொருட்கள், மருந்து பொருட்கள், உணவு, ஆடைகள் என அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்தால் போதும் டோர் டெலிவரி செய்து விடுகின்றனர் .

வெளிநாட்டு உணவுகளும் நம் நாட்டில் சாதாரணமான பழக்கமாகிவிட்டது. அதில் ஒன்றுதான் நூடுல்ஸ். குழந்தைகளை எளிதில் கவர்ந்து விடும் நூடுல்ஸ் விற்பனையும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அமேசான் தளத்தில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

திருச்சி மாவட்டம் திருவெம்பூர் அரியமங்கலத்தை சேர்ந்த ஜான் ஜூடி மெயில்ஸ் என்பவரின் மகள் ஸ்டெபி ஜாக்குலின்.  இவர் திருச்சியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். சிறுமிக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால் கடையில் வாங்கியோ அல்லது வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கின்றார்.

அந்த வகையில் நேற்று வழக்கம்போல் நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்ட அவர் அமேசானில் சைனீஸ் ஃபுல் டாக் நூடுல்ஸ் ஆடர் செய்து இருக்கின்றார். அதனை சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு படுத்து தூங்கியே சிறுமி காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர் ,

சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமி உயிரிழப்புக்கான காரணம் தெரிய வந்தது. அந்த நூடுல்ஸ் காலாவதியாகி இருந்ததால் அவர் உயிரிழந்திருக்கின்றார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

More in Latest News

To Top