Connect with us

ஃபார்முலா 4 கார்பந்தயம்… முதல் நாள் நிகழ்ச்சி… வெளியான புதிய அட்டவணை…!

Latest News

ஃபார்முலா 4 கார்பந்தயம்… முதல் நாள் நிகழ்ச்சி… வெளியான புதிய அட்டவணை…!

ஃபார்முலா 4 கார்பந்தயம் தொடர்பான புதிய அட்டவணை தற்போது வெளியாகி இருக்கின்றது.

ஃபார்முலா 4 கார்பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைக்கப்பட்ட நிலையில் எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் இரவு 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் இல்லை என்றால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிகச் சான்று பெறப்பட்ட அடிப்படையில் போட்டிக்கான புதிய அட்டவணை வெளியாகி இருக்கின்றது. அதன்படி ஃபார்முலா போர் கார்பந்தயத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட புது அட்டவணை வெளியாகியிருக்கின்றது. இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும், நாளைய தினம் தகுதிச்சுற்று ஆட்டங்களுடன் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நிகழ்வு இரவு 11 மணிக்கு நிறைவடையும் என விளையாட்டுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

More in Latest News

To Top