Latest News
கெட்டுப்போன ஆட்டுக்கால்… ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு… வெளுத்தெடுத்த அதிகாரிகள்…!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உணவகத்தில் கெட்டுப் போன ஆட்டுக்கால்களை வைத்திருந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆட்டுக்கால் பாயா. இடியாப்பத்தை பாயாவில் பிசைந்து சாப்பிடுவது என்பது தனி ருசியை கொடுக்கும். பரோட்டா மற்றும் சாதத்துடன் பலரும் ஆட்டுக்கால் பாயாவை சேர்த்து சாப்பிடுவார்கள். உணவகங்களில் அதிகம் விற்பனையாகும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது இதுதான்.
சென்னையில் சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சி தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் உங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடத்திவரப்பட்ட 1700 கிலோ கெட்டுப் போன இறைச்சி பிடிபட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மூட்டை மூட்டையாக வைத்திருந்தது பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதை அனைத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இது ஆட்டுக்கால் பாயா பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கெட்டுப்போன ஆட்டுக்கால்களை ஆய்வு செய்தபோது அதில் நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாத கணக்கில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் குடோன்களில் மூட்டையாக போடப்பட்டிருந்த ஆட்டுக்கால் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒரு வேலை இந்த கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் ஹோட்டலில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டால் இதை சாப்பிடுபவர்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்து இருக்கின்றார். கெட்டுப்போன இறைச்சிகளை சமைக்கும் போது உணவு கெட்டுப் போய்விடும். சில நேரங்களில் நாம் ஹோட்டல்களில் சாப்பிடுவது வயிற்று உப்பிக்கொண்டு வலி ஏற்படும்.
பின்னர் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும். அந்த வகையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை வைத்து சமைக்கப்படும் ஆட்டுக்கால் பாயா விஷமாகும் ஆபத்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். எனவே ஹோட்டல் உணவுகளில் எப்போதும் கவனம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.