tamilnadu
மின் கட்டணத்தை தொடர்ந்து… இனி இந்த கட்டணமும் உயர்வு… ஷாக்கிங்கில் மக்கள்…!
மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத்தலங்கள், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு இருந்தது.
அதன்படி அனைத்து வகை பயன்பாட்டிற்கும் 4.38 சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும் இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்திருந்தது. மின் கட்டணத்தை தொடர்ந்து தற்போது மின்சார சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு வழங்குவதற்கு 1020 கட்டணம் வசூலிக்கப்பட்டது ஆனால் தற்போது இந்த கட்டணம் 1070 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மும்முனை மின்சார இணைப்புகளுக்கான கட்டணம் 1535 லிருந்து 1610 ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
ஒருமுனை இணைப்புக்கு மீட்டர்கான முன்பணம் 765 லிருந்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. மும்முனை இணைப்பிற்கான இணைப்பு மீட்டருக்கான டெபாசிட் பணம் 2045 இல் இருந்து 2145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்திற்கு ரூபாய் 615 லிருந்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதனை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.