tamilnadu
இனிமே இதெல்லாம் ஆன்லைன் தான்… நாளை முதல் தொடங்கி வைக்கின்றார் முதல்வர் முக ஸ்டாலின்…!
தமிழகத்தில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார்.
நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டத்தை எளிதாக்குவதற்காக கட்டட அனுமதியை இனி ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கின்றார்.
2500 சதுர அடி வரையுள்ள மனையில் 3500 சதுர அடி கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்றும், பரிசீலனை மற்றும் கட்டமைப்பு வசதி கட்டணத்திலிருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.onlineppa.tn.gov.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனே அனுமதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை. கட்டிட பணி நிறைவடைந்ததும் முடிவு சான்றிதழ் பெற வேண்டியதில் இருந்து விலக்கு போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.