Connect with us

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

tamilnadu

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமாக நாக்பூர் லைசன்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்களை வாகனத்திலிருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஊழல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். மேலும் “பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையை அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கின்றார். மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top