Latest News
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்கலன்னா ரேஷன் பொருள் கிடையாதா…? தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!
ஆதார் அட்டையில் இருக்கும் கைரேகை வைக்கும் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது.
தமிழகத்தில் ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று சமூக வலைதள பக்கங்களில் தவறான தகவல் பரவி வந்தது. இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின் போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றது.
கைரேகை சரி பார்க்காத காரணத்தால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருள்கள் வழங்கப்படாமல் இருப்பதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி கைரேகை மறுப்பதிவு செய்வதற்கும், ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது முற்றிலும் பொய்யான தகவல், இதை யாரும் நம்ப வேண்டாம் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.