tamilnadu
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ அன்பரசனுக்கு எந்த தகுதியும் இல்ல… ஜெயக்குமார் ஆவேசம்…!
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ அன்பரசனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று ஜெயக்குமார் பேசி இருக்கின்றார் .
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சரான தாமோ அன்பரசன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் திமுக ஆட்சியில் இருக்கின்றதோ, இல்லையோ ஆனால் திமுகவினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள்.
நடிகர்களை ரசிக்கலாம். அத்துடன் வந்து விட வேண்டும் . முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். நடிகர்கள் முதலமைச்சராவது எம்ஜிஆர், ஜெயலலிதா ஓடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது என்று பேசி இருந்தார். இந்நிலையில் தாமோ அன்பரசன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்ததார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு எந்த தகுதியும் இல்லை. மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த நாகூசும் வகையில் அமைச்சர் பேசி இருக்கின்றார். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றது. பார்முலா போர் கார் ரேஸை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்” என்று காட்டமாக பேசி இருந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.