tamilnadu
காவல் நிலையம் மீது குண்டு வீச்சு… ஸ்டாலின் வெட்கி தலை குனிய வேண்டும்… எடப்பாடி ஆவேசம்..!
காவல் நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது இதை எண்ணி மு க ஸ்டாலின் வெட்கத்தில் தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அடைகின்றது.
இதைவிட மோசமாக சட்ட ஒழுங்கு சீர்கேட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதைவிட மோசமான மற்றொரு நிகழ்வு நடந்து விடுகின்றது. இன்று திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு ஒரு துளி கூட பயமில்லாமல் இருக்கின்றது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததற்கு மு க ஸ்டாலின் வெற்றி தலைகுனிய வேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சீர் கேட்டுள்ள சட்ட ஒழுங்கை காக்க தவறியதால் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றது. சட்டம் ஒழுங்கை காக்கவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.