Connect with us

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

Latest News

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு விடியா திமுக அரசு தொடர்ந்து மூடு விழா செய்து வருகின்றது.

நாங்கள் ஏழை எளிய தொழிலாளர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது என்று பலமுறை கூறிவிட்டோம். எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். சென்னை ஆலந்தூர் அருகே இருக்கும் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக ஊடகத்தில் வெளியான செய்தியை கேட்டு மனவேதனை அடைந்தேன்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும் தங்களது மாநிலங்களிலும் நாடுகளிலும் உடனே இது போன்று உணவகங்களை திறப்போம் என்று கூறிவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக மு க ஸ்டாலின் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறு பாதுகாப்பான இடத்தை வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.

 

More in Latest News

To Top